திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் காமராஜரின் 123 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மீஞ்சூரில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் துரை சந்திரசேகர் தலைமையில் மீஞ்சூர் பஜார் பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி காமராஜரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தினை மணி திரையரங்கில் இலவசமாக பொதுமக்களை பார்க்க வைத்தனர்.
நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் டி.எல். சதாசிவ லிங்கம், வட்டாரத் தலைவர்கள் புருஷோத்தமன், ஜெயசீலன், மாவட்ட துணை தலைவர் வினோத், நகரத் தலைவர்கள் அன்பரசு, ஜெய்சங்கர், உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
No comments