• Breaking News

    கும்மிடிபூண்டி வட்டார நாடார்கள் உறவினர் முறையின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி


    கும்மிடிப்பூண்டி வட்டார நாடார்கள் உறவின் முறையின் சார்பில் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா கும்மிடிப் பூண்டியில் உள்ள காமராஜர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு தலைவர் ஆறுமுக பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ், விழா கமிட்டி நிர்வாகிகள் சசிகுமார், பெனிஷ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஜெயா கல்விக்குழும தலைவர் கனகராஜ், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி. ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் நல்ல தம்பி ஆறுமுக நாட்டார் காமராஜ் முத்துராமலிங்கம் ஞானராஜ் நாடார் சகிலா அறிவழகன் மாணவர்களுக்கு பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடத்தப் பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. 

    முன்னதாக ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் உள்ள காமராஜர் உருவச்சிலைக்கு மலர் மாலையை நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் அணி வித்து மரியாதை செலுத்தினர். தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவித்திட்டங்கள் வழங்கப்பட்டு பள்ளி குழந்தைகள் உள்பட அனைவரும் மதிய உணவு பரிமாறப்பட்டது வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார் சசிகுமார்.

    No comments