• Breaking News

    திருக்குவளை அருகே சமத்துவபுரம் ஸ்ரீ நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி நடைபெற்ற சிறப்பு யாகம்

     

    திருக்குவளை ஊராட்சி, சமத்துவபுரத்திலுள்ள  ஸ்ரீ நல்ல முத்து மாரியம்மன் கோயிலில் ஆனி மாத பௌர்ணமி மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி   சிறப்பு யாகம் நடைபெற்றது.இக்கோயிலில்  விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. 

    தொடர்ந்து   ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மனுக்கு மஞ்சள், திரவியப்பொடி பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மற்றும் கடத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ‌ பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி விஜயா குமரவேல் செய்திருந்தார்.

    கீழ்வேளூர் தாலுக்கா ரிப்போர்ட்டர்        த.கண்ணன் 


    No comments