• Breaking News

    நாகப்பட்டினம் தனியார் மண்டபத்தில் வேவ்ஸ் ரோட்டரி சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா


    நாகப்பட்டினம் வேவ்ஸ் ரோட்டரி சங்கத்தின் புதிய  பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நாகப்பட்டினம் லலிதாம்பிகை மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. தலைவராக எம்.அகிலன், செயலாளராக  கே.கதிரவன், பொருளாளராக ஜே. ராஜேஷ்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

     எ.சுரேஷ் இந்த ஆண்டுக்கான தலைவருக்கு ரோட்டரி காலரை அணிவித்தார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தானராக ரோட்டரி சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் பி.டீ.ஜீ. என்.கோவிந்தராஜ் கலந்து கொண்டு ரோட்டரி சங்கத்தால் நாகப்பட்டினத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள இலவச டயாலிசிஸ் சென்டர் பற்றியும், நட்புறவாடல் பற்றியும் உரையாற்றினார்.

     இந்நிகழ்வில் தற்போதைய ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் மற்றும் நாகூர் வர்த்த சங்க தலைவருமான ஏ.எல்.ஹிமாயத் அலி  தலைவருக்கும் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கும் உறுதி மொழி கூறி சிறப்பு உரையாற்றினார். 

    இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் வேவ்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஆர்.ஜவகர், பீ.சந்திரசேகரன், இ.வி.அன்புசெழியன், எம்.மணிசுந்தரம்  ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக செயலாளர் கே.கதிரவன் நன்றியுரை கூறினார்.

    No comments