• Breaking News

    கும்மிடிப்பூண்டியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

     


    கும்மிடிப்பூண்டி கே எல் கே அரசு மேல்நிலைப் பள்ளியில் 1986 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி கேஎல்கே அரசு மேல்நிலைப் பள்ளியில் 1986ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் வி.எஸ்.ரகு, பிரகாஷ், பத்மநாபன், முருகன், இளங்கோ, கந்தன், ஏ.வி.எஸ்.மணி, மனோகர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை 12  மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை நினைவு கேடயம் வழங்கி முன்னாள் மாணவர்கள் பாராட்டினர்.

    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளான மேஷாக், மானசே, லெபனா ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் கீ போர்டு பரிசளிக்கப்பட்டது. மேலும் முன்னாள் மாணவர் வி. எஸ் .ரகு தனிப்பட்ட முறையில் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின்  குடும்பத்தாருக்கு ஒரு மாதத்திற்கான அரிசி மளிகை பொருட்கள், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். மேலும் முன்னாள் மாணவர்கள் பலர் அந்த குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்கினர்.

    மதுரை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் குழு படம் எடுத்துக் கொண்டனர்.இந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் வருகை தந்து ஒன்று கூடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    No comments