தமிழ்நாடு நாள் விழா கொண்டாடிய தமிழக அரசுக்கு பாராட்டு திருக்குவளை முத்தமிழ் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை முத்தமிழ் மன்றமும் நூலக வாசகர் வட்டமும் இணைந்து புத்தக அறிமுகம், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் , மற்றும் தமிழ்நாடு நாள் விழா எனும் முப்பெரும் விழா நடத்தியது.விழாவிற்கு முத்தமிழ் மன்றத் துணைத் தலைவர் ஜெ.மு.ராதா தலைமை தாங்கினார். கவிஞர் பா. கவியரசன் முன்னிலை வகித்தார்.நூலகர் தி.சங்கர் வரவேற்புரையாற்றினார்.
விழாவின் முதல் அமர்வாக நூல் அறிமுகம் நடைபெற்றது.கவிஞர் முல்லைப் பாண்டியன் எழுதிய 'நுரைச்சுவடுகள்' எனும் நூலை கவிஞர் வடகை நேசன் அறிமுகம் செய்தார். எழுத்தாளர்
செக .வீரராசன் எழுதிய 'கண்ணாப்பூர் கண்ட நாடக மேடைகள்' எனும் கட்டுரை நூலை கவிஞர் செந்தூர் குமார் திறனாய்வு செய்தார். கவிஞர் க.ரவிச்சந்திரன் எழுதிய 'காலம் வரைந்த கோலங்கள்' எனும் கவிதை நூலை புலவர் வேதரெத்தனம் விமர்சனம் செய்து பேசினார். விழாவில் பள்ளி மாணவர்களின் பேச்சு, பாடல், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன . பங்குபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இரண்டாவது அமர்வாக 'காலம் தந்த கொடை காமராசர்' எனும் தலைப்பில் கவிஞர் குவளை சோ. கணேசன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது கவிஞர்கள் கே. எஸ் ராஜா, இமயசிவன், பாலமுத்துமணி கவிதாயினி சுதா அருணகிரி, ஆகியோர் கவிதைப் பாடினர்.விழாவில் சக்திவேல், வேலாயுதம், பாஸ்கரன், நூலகர் கண்ணதாசன் ஆகியோர் பேசினர்.
நூலாசிரியர்கள் தங்கள் நூல் எவ்விதம் படைக்கப்பட்டது என்பதனை சிறப்பாக ஏற்புரையில் கூறினர். அவர்களைப் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டது .தோழர் இங்கர்சால் காமராஜர் குறித்து மக்கள் இசைப் பாடல்களைப் பாடினார். விழாவில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மாணவ மாணவியரென பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடிய தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த கவிஞர் செந்தூர்குமார் நிகழ்வின் முடிவில் நன்றி கூறினார்.
கீழ்வேளூர் தாலுக்கா நிருபர் த.கண்ணன்
No comments