• Breaking News

    திருவள்ளூர்: பொன்னேரி நகரம் சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது



    திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர கழகம் சார்பில் நகர செயலாளர் செல்வகுமார் ஏற்பாட்டில் சின்னகவனம்  பகுதியில் கழகப் பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளையெட்டி மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

     இதில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை தொடக்கி வைத்தார் தொடர்ந்து பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடியை அணிவித்தார் . அதனைத் தொடர்ந்து பொன்னேரி நகர இளைஞர் அணி செயல்வீரர் சந்திப் சரண் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றிய விருப்பம் தெரிவித்த நிலையில் அவர்களுக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான   சிறுணியம் பலராமன் சால்வை அணிவித்து வரவேற்று கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

     தொடர்ந்து வருகின்ற 2026 ல் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை தமிழக முதலமைச்சர் ஆக்குவோம் அதற்காக உழைப்பும் என அப்போது உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் தலைவர் சங்கர் , உபயதுல்லா, சத்தியமூர்த்தி, சலீம், மணிமாறன் ,நீலகண்டன், பிரகாசம், நாகராஜ், சம்பத் ,அருண், சுதாகர் வார்டு கவுன்சிலர்கள் செந்தில்குமார் ,லட்சுமி, மணிமேகலை உள்ளிட்ட நகர கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    No comments