மலையாள படத்தில் நடிக்க எனக்கு பயம்..... நடிகை ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி நடித்த கேடி- தி டெவில் படத்தின் டீசர் வெளியீட்டு விழா கொச்சியில் நடந்தது. விழாவில் அவர் பேசுகையில், இந்தியை தவிர தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நான் நடித்திருக்கிறேன்.
மலையாள படங்களுக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் ஏற்கவில்லை. மலையாள படத்தில் நடிக்க எனக்கு பயமாக இருக்கிறது.
எனக்கு மலையாள சினிமா மிகவும் பிடிக்கும். இந்த துறையில் உணர்வுகளை கையாளும் விதத்தை பார்த்து நான் வியப்படைகிறேன். எனவே மலையாள திரை உலக படங்களில் நடித்தால் என் கேரக்டருக்கு நியாயம் செய்ய முடியுமா? என நினைக்கிறேன். எதிர்காலத்தில் நடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்திய சினிமாவின் மிகவும் அற்புதமான நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவ்வாறு அவர் கூறினார்.
No comments