• Breaking News

    ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்..... ரூ.1 கோடி நிவாரணம்..... குற்றவாளிக்கு சாகும் வரை சிறை.....

     


    ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு அவரை கீழே தள்ளிவிட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதாவது ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவனுடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய சொந்த ஊருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஹேமராஜ் (28) என்ற வாலிபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டார்.

    இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு அவரின் கர்ப்பமும் கலைந்தது. இந்நிலையில் இந்த வழக்கை திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது ஹேமராஜ் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதன்படி குற்றவாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி அவருக்கு 3 ஆயுள் தண்டனை மற்றும் சாகும் வரை கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவு இன்றி எந்த பணியும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். இதன் காரணமாக நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன்படி தமிழ்நாடு அரசும் ரயில்வே துறையும் தலா 50 லட்ச ரூபாய் என மொத்தமாக ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    No comments