உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மருத்துவமனையில் அனுமதி......
டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் ஹைதராபாத்தில் உள்ள நள்சார் சட்ட பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாகவே சிறையில் காலம் கழித்த பின்னர் அவர்கள் நிரபராதி என தெரியவரும் பல வழக்குகளை நாம் பார்க்கிறோம் என வேதனையுடன் கூறினார்.
மேலும் சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு சீர்கெட்டு காணப்படுகிறது என வேதனை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் கடுமையான தொற்று பாதிப்பு காரணமாக தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments