நாகப்பட்டினம் மாவட்டத்தில் பசு,எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணியை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்
கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக நாகப்பட்டினம் ஒன்றியம் வடகுடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி போடுதல் துவக்க விழா நடைபெற்றது முகாமை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியினை துவக்கி வைத்தார் .
கோமாரி நோயானது பசு, எருமை வெள்ளாடு செம்மறி ஆடு பன்றிகளை தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும் இந்நோய் பாதித்த கால்நடைகளுக்கு காய்ச்சல் ,குளம்பு மற்றும வாய் பகுதியில் புண்கள் ஏற்பட்டு தீவனம் உட்கொள்ளாமை அதன் மூலம் பால் உற்பத்தி குறைதல் மாடு மற்றும் எருமைகளில் இறப்பு ஏற்படும். இந்நோய் காற்றின் மூலம் பரவும் நோய் ஆதலால் 6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்வதே சிறந்த வழிமுறை ஆகும் என கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் ராம்நாத் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் செந்தில் ,உதவி இயக்குநர்கள் சங்கீதா ,கணேசன் ,கால்நடை மருத்துவர் பாலாஜி ,பிரபு, லாரன்ஸ் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.வடகுடி ஊராட்சியில் 200 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது .இந்நிகழ்ச்சிக்கு பெருங்கடம்பனூர் கால்நடை உதவி மருத்துவர் லாரன்ஸ் உரிய ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
No comments