கீழையூர் டாஸ்மாக் கடை அருகேயுள்ள வாய்க்காலில் இறந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு
நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி,ஆனைக்கால்மடை வாய்க்காலில் ஒருவர் செத்து மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்தில் வந்த கீழையூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,அவர் வெண்மணச்சேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான சிவராஜ்(63) என்பது தெரிய வந்தது.
மது பிரியரான இவர் இரவு மது அருந்திவிட்டு பாலத்தில் அமர்ந்திருந்த போது தவறி தண்ணீரில் விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்க்காலிலிருந்து மீட்கப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலைக் கண்டு அவரது மனைவி கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments