மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரண பொருட்கள் வழங்கினார்
ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி ஒன்றியம் , புஞ்சை காளமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குழி பந்தப்பாறை மற்றும் காட்டூர் பகுதி இளைஞர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கிரிக்கெட் விளையாட்டு உபகரண பொருட்களை விழாவின் சிறப்பு விருந்தினர் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி அந்தந்த பகுதிக்கு நேரில் சென்று வழங்கினார்.
நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியம், மாவட்ட பொதுச் செயலாளர் சிவசங்கர், மாநில விவசாய அணி திட்ட குழு உறுப்பினர் பாலக்குமார், மாவட்ட தொழில் பிரிவு முன்னாள் செயலாளர் மூர்த்தி (எ)செல்வக்குமார், மண்டல் துணைத் தலைவர் எஸ்.எம்.ஆர். ரமேஷ், மண்டல் பொதுச் செயலாளர் கார்மேகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதயசூரியன், கிளைத் தலைவர்கள் தங்கதுரை, சண்முகசுந்தரம்,அஇஅதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வேலுச்சாமி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments