சென்னை தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணியின் மாநிலச் செயலாளர் லக்ஷ்மன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக,தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் தீபன் மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர் இரா.சூரிய பிரகாஷ் ஆகியோ் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் நாட்களில் அணியின் வளர்ச்சி,செயல்திறன் மற்றும் வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு குறித்தும் விரிவான ஆலோசனைகள் கூட்டத்தின் போது கலந்து ஆலோசிக்கப்பட்டது இதில் மாநிலம் முழுவதும் இருந்து அணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments