ஏவிசி கல்லூரியில் ஆடம் ஸ்மித் நினைவு நாள் அனுசரிப்பு
ஏ.வி.சி. கல்லூரி பொருளாதாரத் துறை சார்பில் பொருளாதாரத் தந்தை ஆடம் ஸ்மித் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
பொருளாதாரத்தின் தந்தை என போற்றப்படும் ஆடம் ஸ்மித் அவர்களின் நினைவு நாள் ஏ.வி.சி கல்லூரி பொருளாதாரத் துறையின் சார்பில் சிறப்புரை மற்றும் மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொருளாதாரத் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் ஆர். கார்த்திகேயன் பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித் பற்றி சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், ஆடம் ஸ்மித் அவர்களின் வாழ்க்கை வரலாறு, முக்கியமான படைப்புகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு அளித்தார்.
நிகழ்ச்சியில் பொருளாதாரத் துறை பேராசிரியர்கள், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆடம் ஸ்மித் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாதார துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
No comments