• Breaking News

    வெங்கடாம்பட்டி ஊராட்சியில் புதிய ரேசன் கடை கட்டிடம் வேண்டும்..... எம்.பியிடம் ஊராட்சி தலைவர் கோரிக்கை......


    வெங்கடாம்பட்டி ஊராட்சியில் புதிய ரேசன் கடை கட்டிடம் கட்டிட வேண்டுமென எம்.பியுடம், ஊராட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்-ஐ நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்டாரகுளத்திற்கு புதிதாக ரேஷன் கடை கட்டிடம் அமைத்து தர வேண்டும். மேலும் வெங்காடம்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராமங்களிலும் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்திட உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். அப்போது திமுக மாவட்ட பிரதிநிதி ரவி சுப்பிரமணியன் , தென்காசி மாவட்ட தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் ராஜாராம் மற்றும் சந்திரசேகர் உடன் இருந்தனர்.

    No comments