கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
கும்மிடிப்பூண்டி காங்கிரஸ் அலுவலகத்தில் கர்மவீரர் காமராஜர்.123 வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி ரெட்டம்பேடு சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது .
இவ்விழாவில் காங்கிரஸ் மாவட்ட முன்னோடிகள் மாவட்ட துணைத் தலைவர்கள் த.ஏஎஸ்.சிவா ரெட்டி, திரு. திக.பிரேம்குமார் மாவட்ட செயலாளர் திரு. என்.ஜெயபாலன் வட்டார நிர்வாகிகள் வட்டார தலைவர் திரு.டிஎன்.பாபு வி.சந்தோஷ்குமார் உட்பட நகர நிர்வாகிகள் எம்.ரோஸ்ரெட்டி, ஏ. சரளா, ஜி.கே.முரளி, பி. நட்ராஜ் ரெட்டி, எம். விஜயகுமார், டி.வி.கணேஷ் திரு. சுப்பிரமணி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பிரேம்குமார் ஏற்பாட்டில் ஜி.என்.டி ரோடு குளக்கரை தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடிக்கு நினைவு பரிசாக காமராஜர் உருவபடம் அன்பளிப்பு வழங்கி குழந்தைகளுக்கு பிறந்தநாள் கேக் விளையாட்டு பொருட்கள் மற்றும் அங்கன்வாடிக்கு தேவையான பேன் டியூப்லைட், குழந்தைகள் சாப்பிட புதிய தட்டு மற்றும் புதிய பாய்கள் போன்ற உபகரணங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
No comments