தவெக தலைவர் விஜய் மீது வழக்குபதிவு.....
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக விஜய் உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட சேதங்களை சரி செய்து தருவதாக தமிழக வெற்றி கழகத்தினர் கூறிய பிறகும் விஜய் மீது வழக்கு போட்டிருப்பது அரசியல் அழுத்தம் என பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
No comments