பேரன் கைது..... விடுவிக்குமாறு கெஞ்சிய மூதாட்டியை தரையில் இழுத்து போட்டு உதைத்து கொன்ற போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சூசைமரியாள். இவருக்கு 80 வயது ஆகிறது. சூசைமரியாளின் பேரனை ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்ய 4 போலீசார் அதிகாலை நேரம் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் போலீசார் பேரனை கைது செய்ய முயன்ற போது சூசை மரியாள் எனது பேரனை விடுங்கள்.
எதற்காக இழுத்துச் செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த போலீசார் மூதாட்டி என்று கூட பார்க்காமல் அவரை பிடித்து கீழே தள்ளி காலால் உதைத்ததால் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மூதாட்டியின் மருமகள் சூசை மரியாளை ஆம்புலன்ஸில் குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்க அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சூசை மரியாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கொடூரமான முறையில் மூதாட்டியை தாக்கி கொலை செய்த நான்கு போலீசாரை கைது செய்து குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments