வீரகேரளம்புதூரில் திமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக்கூட்டம்..... முன்னாள் மாவட்ட செயலாளர் பங்கேற்பு
வீரகேரளம்புதூரில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டார்.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில்,ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக்கூட்டம் வீரகேரளம்புதூரில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிராஜ் தலைமை வகித்தார். வீரகேரளம்புதூர் கிளைச்செயலாளர்கள் மணி, கண்ணன் ஒன்றிய துணைச் செயலாளர் டால்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஒன்றிய செயலாளர் சீனித்துரை வரவேற்று பேசினார் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி பேச்சிமுத்து தொகுத்து வழங்கினார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜேசு ராஜன், யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் ஆகியோர் பேசினர்.
நிர்வாகிகள் சரவணன், மீனவரணி வேல்சாமி, பேச்சிமுத்து, டான் ஆசிர், ஒன்றிய கவுன்சிலர்கள் தர்மராஜ், நான்சி டோமினிக், ராஜபாண்டி ஊராட்சி தலைவர் முருகன், மகளிர் தொண்டரணி மாரியம்மாள், காளிச்சாமி, ,இசக்கி, தங்கதுரை, முருகன் தொண்டரணி பொன் மோகன்ராஜ் செல்லத்துரை ,ராஜா தெய்வராஜ், கணேசன், பேச்சிமுத்து, ஆறுமுகசாமி, லட்சுமணன் அந்தோணிசாமி குமார், செல்லத்துரை, ஆரோக்கியசாமி, முறுக்கு பரமசிவம் மற்றும் பி எல் ஏ 2, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி துணைத் தலைவர் வேல்ராஜ் நன்றி கூறினார்.
No comments