கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு பழவேற்காடு மீனவ பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ்
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் சிறுபான்மையினர் நலன் உரிமை மற்றும் மாவட்ட மகளிர் தொண்டரணி, மீனவ மகளிர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய செயலாளர் முரளிதரன் ஏற்பாட்டில் பழவேற்காட்டில் நடைபெற்றது.
இதில் கழகத் தேர்தல் பணி குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் கலந்துகொண்டு திமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் எடுத்து கூறினார். பின்னர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ்ராஜ், கழக முன்னோடிகளுக்கு உதவி தொகை மற்றும் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஊக்கத்தொகை மீனவ பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி திமுக ஆட்சி நான்காண்டு சாதனைகளை விளக்கி எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை நலன் பிரிவு அமைப்பாளர் முகமது அலவி, மாவட்ட அவைத் தலைவர் பகலவன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர்அன்புவாணன், மாவட்ட நிர்வாகிகள் உமாமகேஸ்வரி,கோளூர் கதிரவன்,பா.செ.குணசேகரன், சுப்பிரமணி, ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் செல்வசேகரன், ஜெகதீசன், ராஜா, வே.ஆனந்தகுமார், சக்திவேல், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன், தொண்டரணி அமைப்பாளர்ஜெயலலிதா சசிதரன், தொண்டர் அணி இணை செயலாளர் ஜெயசித்ரா.சிவராஜ்.பழவை கன்னிமுத்து,உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments