• Breaking News

    சிவகங்கை எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

     


    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், திருப்புவனம் வாலிபர் மரணம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments