பேரணியில் பிரசாந்த் கிஷோருக்கு காயம்..... மருத்துவமனையில் அனுமதி
பீகார் மாநிலம் அறா பகுதியில் இன்று நடைபெற்ற சாலையோர பிரச்சாரத்தில் ஜன சுராஜ் கட்சி நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் காயம் அடைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
பொதுமக்களை நேரில் சந்திக்க தனது காரிலிருந்து சாய்ந்த நிலையில் நின்ற போது போது, திடீரென இடுப்புப் பகுதியில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவரை கட்சி மேடைக்கு அழைத்து செல்லப்பட்டார். விபத்துக்கான முழு விபரம் தெரியவில்லை.இந்த சம்பவம் நடந்து சில நிமிடங்களுக்குள் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. , “மக்களை சந்திக்க அவர் வந்தபோது திடீரெனெ இந்த காயம் ஏற்பட்டது” என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பிரஷாந்த் கிஷோர் சிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனைகளுக்குள் இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments