பாலியல் வன்கொடுமை செய்து இஸ்லாமிய பெண் கொலை..... கண்டுகொள்ளாத அமைச்சர்கள்..... கண்டிக்கும் சமூக ஆர்வலர் சின்னத்துரை
இது குறித்து சமூக ஆர்வலர் சின்னத்துரை தெரிவித்துள்ளதாவது:
கக்கூஸ் திறக்க முற்படும் புதுக்கோட்டை இரண்டு அமைச்சர்கள்.
அக்கா பர்வீன் பானு அவர்களுக்கு இறப்பதற்கு விதி விளக்கு ஏன்????
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா காரனியேந்தல் கிராமத்தில் சகோதரி பர்வீன் பானு என்ற சகோதரி பாலியல் செய்து படுகொலை செய்யபட்டார் இதில் என்ன வேடிக்கை என்றால்.
இங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று கூவும் திமுக ஆட்சியில் தான் இந்த கற்பழிப்பு நடந்து படுகொலை இந்த மாவட்டத்தில் இரண்டு அமைச்சர் உள்ளார்கள் யாரும் இந்த படுகொலைக்கு ஆறுதல் கூட சொல்ல வரவில்லை என்பது முக்கியமான விஷயம்.
இரண்டு பெண் குழந்தைகள் உள்ள தாய் படுகொலை அதுவும் கற்பழித்து செய்யபட்டு படுகொலை செய்து உள்ளனர்.
நாகுடியில் இயங்காது கக்கூஸ் திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் கூட ஒரு அறிக்கை விட வில்லை அதான் சாதி பற்றாக இருக்குமோ.
தமிழ் நாட்டில் கற்பழிப்பு சாதிய படுகொலை கௌரவ படுகொலை எல்லாம் நடந்தாலும் நாம் திமுக சொல்லும் பச்சை பொய்க்காக ஓட்டு போடுவோம் என்று நம்பிக்கை வைத்து உள்ளனர்.
எத்தனை காலம் தான் இப்படி ஏமாந்து போவது நாம் சிந்திக்க வேண்டும் இங்கே நமக்கு பாஜக மட்டும் எதிராக நினைக்கிறோம் காங்கிரஸ் திமுக அதிமுக எல்லாம் எதிரான கட்சி என்பதை உணர வேண்டும்.
இதுவே வேர் யாரேனும் சம்பந்தபட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்க எப்படி இந்த காவல் துறை.
நடவடிக்கை எடுக்க முற்பட்டு இருக்கும் சிறு பான்மை மக்கள் எப்படியும் திமுக விற்கு தான் ஒட்டு போடுவார்கள் என்று அவர்கள் நம்புகிறாகள் அதனால் தான் சகோதரி பர்வீன் பானு படுகொலையில் பல சந்தேகங்கள் வருகிறது.
இது ஒரு சாம்பிள் இனி நேரடியாக இஸ்லாமிய பெண்கள் தலித் பெண்கள் கற்பழிப்பார்கள் யாரும் எதுவும் செய்ய முடியாது ஏன் என்றால் மத கட்சி பாஜக மட்டும் நாம் எதிரியாக நினைத்து துரோகிகளுக்கு ஒட்டு போடுகிறோம்.
இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக இருக்கும் சூழ்நிலையில் ஆலும் கட்சி இதுவரை வந்து ஒரு ஆறுதல் கூட சொல்ல வரவில்லை என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.
செத்தது சிறுபான்மை பெண் என்பதால் தான் இப்படி அக்கறை இல்லாமல் உள்ளீர்கள் என்று தான் அர்த்தம்.
சமூகமும் விழிப்புணர்வு இல்லை என்றால் எல்லாம் நடக்கும் ஒன்று படுவோம் புரட்சி செய்வோம். என தெரிவித்துள்ளார்.
No comments