• Breaking News

    கோவை - சத்தி புறவழிச்சாலையை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


     ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் கோயமுத்தூர் முதல் சத்தியமங்கலம் வரையான புறவழிச்சாலை திட்டத்தினால், ஏராளமான விவசாய நிலங்களும், கிணறுகளும், வீடுகளும், வீட்டுமனை இடங்களும், மரங்களும் விவசாயிகள் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, எனவே அந்தத் திட்டத்தை கைவிட்டு ஏற்கனவே இருக்கும் சாலையையே அகலப்படுத்தி நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளரும், வன விலங்குகளால் பாதிக்கப்பட்டோர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பெரு. நடராஜன்  தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

      500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர்  முருகசாமி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலை வகித்தனர்.

    இந்த மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உழவர் உறவுகளுக்கும் சங்கத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்  நன்றியை தெரிவித்து  கொண்டார்கள்.

    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments