ஈஞ்சம்பள்ளி கீரமடை வேலத்தாள் திருக்கோவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் , மொடக்குறிச்சி ஒன்றியம் , ஈஞ்சம்பள்ளி கிராமம் கீரமடை அருள்மிகு ஸ்ரீ வேலாத்தாள் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு வேலத்தாள் சுவாமிக்கு கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம், கோ பூஜையுடன் வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருள் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.
No comments