திருவள்ளூர் மாவட்ட சிலம்பு கமிட்டி மற்றும் எம்ஜிஆர் சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்தும் ஏழாம் ஆண்டு மாவட்ட அளவிலான மாபெரும் சிலம்பம் போட்டி
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட சிலம்பு கமிட்டி மற்றும் எம்ஜிஆர் சிலம்பாட்ட கழகம் இணைந்து எம் என் என் நைனா முகமது ஆசான் நினைவு தினத்தை ஒட்டி ஏழாம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆண் &பெண் மாபெரும் சிலம்பப் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட சிலம்பு கமிட்டி செயலாளர் எம் ஜி ஆர் சிலம்பாட்ட கழக தலைவர் மாஸ்டர் ஜே ரஜினி வரவேற்பு நிகழ்த்தினார் இதில் சீனியர் போட்டியை திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கமிட்டி சேர்மன் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே எம் எஸ் சிவக்குமார் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஜூனியர் போட்டியை எஸ் கே ஜி குடும்பத்தினர் தொடக்கி வைத்தனர் தொடர்ந்து சப் ஜூனியர் போட்டியை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவக்களி ஜெயராமன் துவக்கி வைத்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக வேல்முருகன், இளங்கோவன், முகமது ரபிக் ,ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து நிகழ்ச்சியினை எம்ஜிஆர் சிலம்பாட்ட குழு ஆலோசகர்கள் ராஜ செட்டியார், தசரத ரெட்டியார், தேசப்பன், ரவி, ஜீவா, குமார், ராஜி, ரவி, தேசிங்கு ,ரமேஷ் ,ஜெகன் ஆகியோர் தலைமை வகித்தனர் தொடர்ந்து கிராம நிர்வாகிகள் ராஜி செட்டியார், சின்னத்துரை செட்டியார், சுரேஷ் செட்டியார், பிரபாகரன் செட்டியார், ராஜாங்கம் செட்டியார், மோகன் செட்டியார், ஜெகதீஷ், சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் திருவள்ளூர் மாவட்ட சிலம்ப கமிட்டி தலைவர் டாக்டர்.ராஜா, தொழில் நுட்ப இயக்குனர் மாஸ்டர் ராஜா ,பொருளாளர் பாஸ்கர், அமைப்பு செயலாளர் சங்கீதா, போட்டி இயக்குனர் சௌந்தர்யா, யோக பிரியா, துணைத் தலைவர் பாலன், துணைத் தலைவர் சரண்ராஜ், இணை செயலாளர் குருமூர்த்தி, துணை செயலாளர் கார்த்தி ,தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளும் ரொக்க பரிசுகளும் முன்னாள் சேர்மன் கே எம் ,எஸ் சிவகுமார் வழங்கினார் இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நன்றியுரையை எம்ஜிஆர் சிலம்பாட்ட கழக செயலாளர் தினேஷ் வாங்கினார்.
No comments