யாருடன் கூட்டணி.? நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, அவர் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடம் கிடைக்குமா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் சென்னை வருவதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரை விமான நிலையம் வந்தபோது, அவரிடம் கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது அவர், கூட்டணி குறித்து நாளை (இன்று) சென்னையில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டார். இந்நிலையில், சென்னையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அவருடைய ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைகிறது என அவர்கள் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர்.
No comments