• Breaking News

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்

     


    தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வார காலமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறது நிலையில் சமீபத்தில் டிஸ்சார்ஜ் இன்று தலைமைச் செயலகத்திற்கு வழக்கம் போல் பணிக்கு திரும்பி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு இன்று தன்னுடைய பணிக்கு திரும்பி உள்ள நிலையில் முன்னதாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

    அதன்படி தேமுதிகவின் சுதீஷ், பார்த்தசாரதி ஆகியோருடன் பிரேமலதா விஜயகாந்த் முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடல்நலம் குறித்து விசாரித்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி, துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக கூட்டணி தொடர்பாக ஜனவரி மாதம் அறிவிக்க இருக்கும் நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அதிமுக கட்சியில் தேமுதிக கூட்டணியில் நீடிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில் ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிருப்தியில் இருப்பதால் கூட்டணியில் இருந்து விலகி திமுக அல்லது விஜய் உடன் இணையலாம் என்று கூறப்பட்டது. மேலும் இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் திடீரென முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தது தற்போது கவனிக்கத்தக்க ஒரு விஷயமாக மாறி உள்ளது.

    No comments