ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை...... பிரதமர் அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றுள்ளார். மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாளையும், தென்கிழக்கு ஆசிய கடல் பயணத்தின் 1000-வது ஆண்டு நிறைவையும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும் கொண்டாடும் விதமாக ஜூலை 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஆடி திருவாதிரை விழா நடைபெற்றது.
இன்று பிரதமர் மோடி சோழவந்தம் ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிபேட்டில் வந்து இறங்கினார். வழிநடுக சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருக்கும் மக்கள் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்துள்ளார்.பின்னர் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பின்னர் பிரதமர் மோடி மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
No comments