• Breaking News

    பிரபல ஆன்மிக பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார்

     


    தமிழகத்தின் கிராமங்களில் ஆடி மாதம் முழுவதும் ஒலிக்கும் அம்மன் பாடல்களுக்கு உயிர் கொடுத்த ஆன்மிக பாடகர் சக்தி சண்முகராஜா காலமானார். மலையனூரு அங்காளியே, வேப்பிலை நாயகி, ஆடி வரா ஓடி வரா போன்ற பாடல்களை பாடி, இசையமைத்த இவர், சிறுவயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபட்டு, அன்னை அம்மனை குருவாக வழிப்பட்டவர். ஆடி மாதத்திலேயே இவரது மறைவு, பக்தர்கள் மனதில் பெரும் பிழம்பாகத் தவிர்க்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது. அவரது ஆன்மிகக் குரல் இனி ஒலிக்காது என்ற சிந்தனையே பக்தர்களை கண்கலங்கச் செய்துள்ளது. RIP சக்தி சண்முகராஜா.



    No comments