• Breaking News

    கும்மிடிப்பூண்டி ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால்சாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது


    கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தபால் தெருவில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத ஸ்ரீ வேணுகோபால சாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கடந்த 29 தேதி பந்தக்கால் நிகழ்வுடன் தொடங்கிய இவ்விழாவில் நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லக்ஷ்மி ஹோமம், கிராம தேவதா பூஜை கோபூஜை அஷ்டபந்தனம் சாற்றுதல் பூஜை நடந்தது பின்னர் ஜூலை 7 தேதி ஸ்ரீ மங்களாம்பிகை சமேத - ஸ்ரீ சோமேஸ்வர சிவனுக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷனம் கும்பலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, மஹா சங்கல்பம், முதற்கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் விசேஷ சந்தி, சகல பரிவார தேவதா ஆவாஹனம், சோம பூஜை, பாலிகா பூஜை துவார பூஜை, மஹா பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், ராக தாள உபச்சாரம், திராவிட வேதம், மஹா தீபாராதனை, பிரசாத விநியோகம் மற்றும் நாடி சந்தானம் நடைபெறும்.

    ஜூலை 8 தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, விசேஷ பூஜை, விசேஷ ஹோமம், சகல சூக்த ஹோமம் மூல மந்தர ஜப ஹோமம், திரவ்யாஹு திவேதிகார்ச்சனை, ருத்ர பாராயண ஹோமம் மாஹபூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது .தொடர்ந்து இன்று அதிகாலை ரெட்டம்பேடு பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் புனித நீர் எடுத்து வந்து கோயிலை வலம் வந்து ராஜகோபுரம் மீது புனித நீர் ஊற்றி  ஸ்ரீ ராதா ருக்குமணி வேணுகோபால சமேத  கும்பாபிஷேகம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் கவரப்பேட்டை கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு  சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.



    No comments