• Breaking News

    அஜித் குமாரின் இறப்புக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...... தமிழ்நாடு பஞ்சர் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கம் கோரிக்கை......

     


    தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழ்நாடு பஞ்சர் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் நலத் தங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

    இந்த கூட்டமானது மாநிலத் தலைவர் முத்துராஜ், மாநில பொதுச் செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையிலும், தேனி மாவட்ட நிர்வாகிகள் தலைவர் தங்கப்பாண்டி, செயலாளர் சுரேஷ், துணைச் செயலாளர் முகமது உசேன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் காப்பிட்டு உறிய சான்றுகள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த கூட்டத்தில் அஜித் குமாரின் இறப்புக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும், கடலூர் அருகே ரயில் விபத்தில் இறந்த பள்ளி குழந்தைகளுக்கு மவுனம் செலுத்துதல், இந்த ஆண்டு நிறைவுக்குள் நம்முடைய சங்கத்தில் 5000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ஒன்றிணைத்து திருச்சியில் மாநாடு நடத்த வேண்டும். தமிழக அரசு நலவாரியம் அமைத்து தர வேண்டும். வேலையின் போது உயிரிழப்பு ஏற்படுகிறது அதற்கான தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அடக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.இந்தக் கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    No comments