• Breaking News

    குறும்பலாப்பேரியில் குழந்தைகள் மற்றும் இளையோர் நல முகாம்..... பழனிநாடார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்......


    குறும்பலாப்பேரியில் நடைபெற்ற குழந்தைகள் மற்றும் இளையோர் நல முகாமினை தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார் தொடங்கி வைத்தார்.

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் காங்கிரஸ் பொன் பாண்டியன் அறக்கட்டளை, பாண்டிய ராணி அறக்கட்டளை, தென்காசி ப்ரோ விஷன் கண் மருத்துவமனை, தென்காசி விஷ்ணு குழந்தைகள் நல கிளினிக் இணைந்து நடத்திய மாபெரும் இலவச குழந்தைகள் மற்றும் இளையோர் நல முகாம் நடைபெற்றது. இம்முகாமினை பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமை வகித்து தொடங்கி வைத்தார். என் உடல் நலமும் எனது நல்வாழ்வும்" என்ற உணவு குறித்த கையேட்டினையும் அவர் வெளிட்டார்.  இந்த கையேடு அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    இளையோர் சிறப்பு மருத்துவர் சபிதா பானு, தலைமை கண் மருத்துவர் ராஜகுமாரி மற்றும் கண் மருத்துவர் விஜய் மற்றும் குழுவினர்  பங்கேற்று சிறார் வளர்ச்சி பருவ நோய்களான காய்ச்சல், இருமல், ஆஸ்துமா, ஒவ்வாமை, தொற்று நோய்கள், எக்ஸிமா, வளர்ச்சி பின்னடைவு, இரத்த சோகை மற்றும் கண் பரிசோதனைகள்  போன்ற நோய்களுக்கு பரிசோதனை, சிகிச்சை மேற்கொண்டனர். 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அனைவருக்கும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    இம்முகாமில் பி.டி.சி.மேகநாதன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், வட்டார தலைவர் குமார்பாண்டியன், நகர தலைவர் சிங்ககுட்டி (எ) குமரேசன், ஊராட்சி தலைவர் பாண்டியன், பொன்ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ஞான ரூபன், தர்ஷினி செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    No comments