காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்த மெய்வழி மக்கள் இயக்கம் நிர்வாகிகள்
மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி தேனி மாவட்டத்தின் சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 123 வது பிறந்த நாளினை முன்னிட்டு தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருக்கும் காமராஜர் ஐயாவின் முழு திரு உருவ சிலைக்கு மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
உடன் மாவட்ட செயலாளர் தினேஷ் அவைத் தலைவர் முத்து இளைஞர் அணி தலைவர் ஈஸ்வரன் நகரச் செயலாளர் அருள் பாண்டி நகர துணை செயலாளர் பிரகாஷ் இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் மகளிர் அணி துணைத் தலைவர் அமுதா துணைச் செயலாளர் கஸ்தூரி காவிய லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments