• Breaking News

    தென்காசி நகராட்சி பள்ளியில் வாட்டர் பெல் திட்டம் தொடக்கம்..... குடிநீர் பாட்டில்களை நகராட்சி தலைவர் வழங்கினார்.....

     


    தென்காசி நகராட்சி பள்ளியில் வாட்டர் பெல் திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு  குடிநீர் பாட்டில்களை நகராட்சி தலைவர் சாதிர் வழங்கினார்.

    தென்காசி 13 வது வார்டு கீழபாறையடி தெருவில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில்  வாட்டர் பெல் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகூர் மீரான் முன்னிலை வகித்தார். நகரமன்ற தலைவர் சாதிர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைத்தலைவர் சித்திக் ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் பாட்டில்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில விவசாய அணி செயலாளர் முகமது அலி, விடுதலைக் சிறுத்தைகள் கட்சி சுப்பிரமணியன், பசி இல்லா தமிழகம் நிறுவனத் தலைவர் முகமது ஜின்னா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், முடிவில் நல்லாசிரியர் ஜபருல்லா நன்றி கூறினார்.

    No comments