• Breaking News

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா


    திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் பொன்னேரி ஆண்டார்குப்பம் தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் தனபால் இருவருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும் இருவருக்கும் சால்வை மாலை அணிவித்து கௌரவித்து வரவேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

     இதில் முன்னாள் அமைச்சர் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன்,பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின்,அப்துல் ரஹீம்,அம்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர்,பஞ்செட்டி நடராஜன்,பானு பிரசாத்,சுமித்திரகுமார்,முத்துகுமார்,செல்வகுமார்,ஆரணி ஏ.எம் தயாளன்,பொன்னுதுரை,ராகேஷ், இ.ஆர்.டி. தமிழ்செல்வன்,தேவம்பட்டு உதயகுமார், வழக்கறிஞர்கள் திருமலை,கோளூர் கோதண்டன்,கார்த்திக்,மாரி, சின்னக்காவனம் விஜயகுமார்,பெரிய காவணம் செந்தில்குமார், பஞ்செட்டி,செந்தில்குமார்,இளையராஜா, மெரட்டூர் திருமுருகன்,பாண்டி,கோபி,ஆமூர் தனசேகரன்,செல்வமணி,ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



    No comments