• Breaking News

    கிட்னி திருட்டு..... திமுக நிர்வாகிகள் லிஸ்ட் வெளியிட்ட அண்ணாமலை

     


    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஏழைகள் குறிவைத்து கிட்னி திருடும் கொடூர சம்பவங்கள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் இடைத்தரகராக பணியாற்றிய ஆனந்தன் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் திமுக நிர்வாகியாக இருப்பதாக கூறப்பட்டு, தற்போது காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில், கிட்னி திருட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மனித நேயத்துக்கும் சட்டத்துக்கும் எதிரான இத்தகைய செயலை அரசு கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    தனது எக்ஸ் பக்கத்தில் கூறியது:

    நாமக்கல்லில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின், வறுமையைப் பயன்படுத்தி, திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் என்ற நபர் மூலம் நடைபெற்றுள்ள கிட்னி திருட்டு, நாட்டையே அதிர வைத்துள்ளது. குறிப்பாக, மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தும், திமுகவினருக்குத் தொடர்புடைய இன்னும் சில மருத்துவமனைகளில் வைத்தும் தான், தங்களுடைய கிட்னி எடுக்கப்பட்டது என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்துச் செய்திகள் வெளிவந்து ஐந்து நாட்கள் ஆகியும், கிட்னி திருட்டில் புரோக்கராகச் செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தனை, திமுக அரசு கைது செய்யவில்லை. தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகக் காவல்துறை கூறி வருகையில், அந்த நபர், அவரது வீட்டருகே இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை என, பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் திமுகவினராக இருக்கின்றனர்.

    திமுக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கையே, அவர்கள் இத்தனை தைரியமாகக் குற்றச் செயல்களில் ஈடுபடக் காரணம். அதனை மீண்டும் மீண்டும் நிரூபிப்பது போலச் செயல்படுகிறது முதலமைச்சர் தி.ரு முக ஸ்டாலின் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தமிழகக் காவல்துறை. தமிழகத்தில், கந்து வட்டி தடைச்சட்டம் உள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில், கிட்னி திருட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும், கந்து வட்டி கடனைத் தீர்க்கவே சட்டவிரோதமாகக் கிட்னி விற்பனை செய்ய முன்வந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

    No comments