பாவூர்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழாவில் பழனிநாடார் எம்எல்ஏ பங்கேற்பு
பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழாவில் பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
பாவூர்சத்திரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற விழாவிற்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர்கள் இரா.சாக்ரடீஸ், சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் மேரி மாதவன் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் சேதுராமலிங்கம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர் வகைகள், காய்கறி, பழச்செடி தொகுப்புகள் வழங்கப்பட்டது. இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் குமார்பாண்டியன், கீழப்பாவூர் நகர தலைவர் சிங்ககுட்டி (எ) குமரேசன், வேளாண்மை அலுவலர் விமலாதேவி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மணியம்மாள், ரமேஷ், தோட்டகடை உதவி இயக்குனர் சொர்ணம், தோட்டக்கலை அலுவலர் சுந்தர்ராஜ் மற்றும்; உதவி தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments