ஓரணியில் தமிழ்நாடு..... திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் அப்போலோ வர முதலமைச்சர் அழைப்பு
வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அப்போலோ மருத்துவமனைக்கு வர திமுகவின் மண்டல பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அதாவது கடந்த 21ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக தமிழக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி அவர் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்து தகவல் அறிய திமுகவின் மண்டல பொறுப்பாளர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். அதோடு தேர்தல் களப்பணிகள் குறித்தும் மண்டல பொறுப்பாளர்களிடம் கேட்டறிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
No comments