• Breaking News

    மயிலாடுதுறை: ஏ.வி.சி (தன்னாட்சி) கல்லூரியில் பொருளாதார மன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது


    மயிலாடுதுறை, மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி (தன்னாட்சி) பொருளாதாரத் துறை சார்பில் பொருளாதார மன்றத்தின் சிறப்புக் கூட்டம்  நடைபெற்றது. 

    கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் தலைமைவகித்தார். முன்னாள் பொருளாதாரத் துறை தலைவர், பேராசிரியர். எஸ்.சிவபுண்ணியம்  கலந்து கொண்டு "நிறுவன சமூக பொறுப்பு" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி பின்னர் இன்டர்ன்ஷிப்பில் கலந்து கொண்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக பொருளாதார துறைத் தலைவர் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் வரவேற்று சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். 

    கூட்டத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியர்கள், பிற துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பொருளாதார மன்ற மாணவ ஒருங்கிணைப்பாளர் எஸ்.சஹானா பானு நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொருளாதார மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். தர்மராஜ் மற்றும் பொருளாதாரத்துறை பிற பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    No comments