திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் - MAKKAL NERAM

Breaking

Thursday, July 17, 2025

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

 


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக அடிக்கடி வருகை தருகின்றனர்.

அந்த வகையில் ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, சிறப்பான முறையில் சாமி கும்பிட்டதாகவும், எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் மகிமை வாய்ந்தவர் திருப்பதி ஏழுமலையான் என்றும் கூறினார்.


No comments:

Post a Comment