• Breaking News

    நாகை அருகே வெண்மணியில் அருள்மிகு மங்களாம்பிகா சமேத தர்மபுரீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷகம்..... திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.....


    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழவெண்மணி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு மங்களாம்பிகா  சமேத தர்மபுரீஸ்வரர் ஆலயம் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷகம் இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷகம் விழா கடந்த 2 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சகவ்ய பூஜை, கோ பூஜை, லெஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனத்தோடு முதல்கால யாக சாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜையோடு பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்று வந்தது. 

     நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை  காண்பிக்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் ஒலிக்க ஆலய கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷகம் நடைப்பெற்றது. தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் ஸ்ரீ செல்லகாளியம்மன் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ பெத்தாரண ஸ்வாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை நடைப்பெற்றது. 

    சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் கும்பாபிஷகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி 


    No comments