திண்டுக்கல், நாராயண பிள்ளை தோட்டம் 3-வது தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டின் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் கீழ்நிலை தொட்டிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த தினேஷ்குமார்(27), நாகமுனி(29) ஆகிய இருவரும் திடீரென மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து இருவரையும் மீட்டனர். இருவரும் மயக்கமான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேற்படி சம்பவம் குறித்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment