வலிவலம் அருகே ஸ்ரீ சின்னம்மாள் காளியம்மன் கோயில் 30 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் கொடியாலத்தூரில் ஸ்ரீ சின்னம்மாள் காளியம்மன் ஸ்ரீ அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் 30ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள சின்னம்மாள் காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ பால விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ அய்யனார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாரதனை மற்றும் கஞ்சி வார்த்தை நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக சக்தி கரகம் மற்றும் கப்பரை எடுத்தல் நிகழ்வுடன் பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும் அலகு குத்து மயில் காவடி சுமந்து வந்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்கள். இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாரனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு அம்பாள் மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கீழ்வேளூர் தாலுகா நிருபர் த.கண்ணன்
No comments