பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய ஆமூர், வடக்கு பட்டு, மாலிவாக்கம், உள்ளிட்ட கிராமங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் தச்சூர் கூட்டு சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இதில் 14 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை அரசுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கினர், இம்முகாம் தமிழக முதல்வரால் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் துவங்கி தமிழகம் முழுவதிலும் நடைபெற்று வருகிறது.
இதில் பொது மக்களுக்கு வேண்டிய ஆதார், பிறப்புச் சான்று, மகளிர் உரிமைத் தொகை,நிலபட்டா, உள்ளிட்ட தேவைகளுக்கு பொதுமக்கள் மனுக்களை அளித்தனர் அம்மனுக்கள் மீது 40 தினங்களுக்குள் உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர், இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் காது கேளாதவர்களுக்கு கருவிகளை பொருத்தி முதல்வரின் சிறப்பான திட்டங்களை எடுத்து கூறினார் இதில் பொன்னேரி கோட்டாட்சியர் ரவிக்குமார், வட்டாட்சியர் சோமசுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, குணசேகரன், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், அவைத்தலைவர் பகலவன்,அன்புவாணன், குணசேகரன்,உமா மகேஸ்வரி, சோழவரம் இளைஞரணி கதிரவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments