• Breaking News

    எஸ்ஏசி இஞ்சின் காம்போனண்ட்ஸ் தொழிற்சாலை சார்பில் 32ஆம் ஆண்டு ரத்த தான முகாம்

     


    திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் செயல்பட்டு வரும் எஸ்ஏசி இன்ஜின் காம்போனண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் இண்டஸ்ட்ரீஸ் சிட்டி இணைந்து 32 வது ரத்ததான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தினர். 


    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் உள்ள எஸ்ஏசி என்ஜின் மற்றும் காம்போனெண்ட்ஸ் தொழிற்சாலை சார்பில் கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரத்ததான முகாமை நடத்துவார்கள், இந்த நிலையில் இவர்களது 32 வது ரத்ததான முகாம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது.


    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை எஸ்எஸ்சி இன்ஜின் காம்போனண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை நிர்வாகத்தார் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.இந்த முகாமில் சென்னை விஎச்எஸ் ரத்த வங்கியின் சார்பில் மருத்துவ குழுவினர் வருகை தந்து இரத்ததான முகாமில் பங்கேற்று ரத்த தான முகமை வழிநடத்தினர்.

    தொடர்ந்து இந்த முகாமில் எஸ்எஸ்சி இன்ஜின் காம்போனண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை உள்ளிட்ட கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற் பேட்டையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தொழிற்சாலையை சேர்ந்த பணியாளர்கள் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர்.தொடர்ந்து முகாமில் பங்கேற்றவர்களுக்கு பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து தொகுப்பு, பாராட்டு சான்றிதழ் தொழிற்சாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

    No comments