• Breaking News

    ஆலங்குளம் அருகே நல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்நோக்கு மருத்துவ முகாம்..... மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.......


    ஆலங்குளம் அருகே நல்லூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பன்நோக்கு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தொடங்கி வைத்தார்.


    தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரம் நல்லூர் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின்  பன்நோக்கு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட, பொது மக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம், இருதவியல், நரம்பியல், தோல்,, பல், கண், காது மூக்கு தொண்டை, மனநலம், இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் நடைபெறுகிறது.


    மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், பரிசோதனை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், பரிசோதனை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


    இம்முகாமானது ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் .சோமசுந்தரம், இணை இயக்குநர் பயிற்சி சந்தோஷ் குமார், இணை இயக்குநர் பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆறுமுகம்,அரசு அலுவலர்கள், மருத்துவம் மக்கள் நல்வாழ் துறைசார்ந்த பணியாளர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    No comments