கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பேகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரை கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த 2011-ஆம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த விபத்தில் முகமது உயிரிழந்து விட்டதாக தெரிகிறது. இதனால் பேகம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
அவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜாராமுடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2013 ஆம் ஆண்டு பேகம் ராஜாராமை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் இந்த தம்பதியினர் சிங்கம்புணரி போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
ராஜாராமுக்கு உயிருக்கு ஆபத்தான நோய் இருந்ததாகவும் இதனால் பேகமுடன் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ராஜாராமுக்கு டிரைவராக வேலை பார்த்த ஜெயபாண்டியன் என்பவர் பேகமுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.
இதனையடுத்து ஜெய பாண்டியன் கோவிலில் வைத்து தாலி கட்டி 3-வதாக பேகமை திருமணம் செய்து கொண்டார். ஜெய பாண்டியனுக்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இது குறித்து பேகம் கேட்டபோது தனது அத்தை மகள் லாவண்யா வாழ்க்கையில் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு அடிக்கடி செல்போனில் ஆறுதல் கூறி வருவதாக ஜெயபாண்டியன் கூறியுள்ளார்.
பின்னர் பேகமுக்கு தெரியாமல் ஜெய பாண்டியன் லாவண்யாவை இரண்டாவதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பேகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஜெயபாண்டியன் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, 20 பவுன் தங்க நகை, வெளிநாட்டு இன்சூரன்ஸ் பணம் ஆகிய அனைத்தையும் அபகரித்து. என்னை அடித்து தொந்தரவு செய்கிறார் என பேகம் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment