செப்டம்பர் 7 சந்திர கிரகணம்..... திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடல்.....
பாரம்பரியப்படி, கிரகணம் தொடங்கும் 6 மணி நேரத்திற்கு முன்பே கோவில் மூடப்படும். எனவே செப்டம்பர் 7ம் தேதி மதியம் 3.30 மணிக்கே கோவில் வாசல்கள் மூடப்படும். செப்.,8ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்யாவசனம் நடைபெறும்.
பின்னர் காலை 6 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனம் தொடங்கும். செப்.,7ம் தேதி கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.செப்டம்பர் 8 காலை 8.30 மணி முதல் அன்னபிரசாத விநியோகம் மீண்டும் தொடங்கும். எனவே, பக்தர்கள் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தங்கள் யாத்திரையைத் திட்டமிட்டு செய்வது நன்று.
No comments